காசு கொடுத்து கணவனை குடிக்க அனுப்பிய மனைவி! பிறகு கள்ளக்காதலனுடன் செய்த பகீர் சம்பவம்!

மயிலாடுதுறை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே ஆள் ஏவிக் கொன்றசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும், நீடாமங்கலத்தைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் 7 ஆண்டுகள் முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2  வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில், திவ்யாவிற்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதன்பேரில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் குடும்ப நண்பர்கள் ஒன்று சேர்ந்து, சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் குத்தாலம் பகுதியில் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள். 

நேற்றிரவு மது குடிப்பதற்கு பணம் தரும்படி திவ்யாவிடம் முரளி கேட்டுள்ளார். அவரும் பணம் கொடுக்கவே, மது அருந்த சென்ற முரளி, சாலையில் சடலமாகக் கிடக்கும் தகவல் சில மணிநேரத்தில் கிடைத்தது. இதுபற்றி குத்தாலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை தொடங்கினர்.

இதில், திவ்யாவே, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனை ஆள் ஏவி கொன்றுவிட்டதாக, தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.