சகோதரியின் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவன் கதையை முடித்த பெண்! அதிர வைக்கும் காரணம்!

புதுவையில் தினமும் குடித்துவிட்டு தொல்லை செய்து வந்த கணவனை தனது சகோதரி மற்றும் அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சாக்குப்பையில் கட்டி சாக்கடையில் வீசிய அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.


புதுவையில் முதலியார்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ள கமலக்கண்ணன் இவர் அப்பகுதியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் ஸ்டெல்லா என்பவருக்கும் திருமணமாகி சில வருடங்கள் ஆன நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கமலக்கண்ணன் தினமும் இரவு குடித்துவிட்டு வந்து ஸ்டெல்லாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்டெல்லா தன் கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் திங்கட்கிழமை அன்று  கமலக்கண்ணன்  எப்போதும் போல் கொடுத்துவிட்டு  வீட்டிற்கு வந்து ஸ்டெல்லாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் அப்போது ஆத்திரம் அடைந்த ஸ்டெல்லா  அவரை ஆத்திரத்தில் தள்ளிவிட்டுள்ளார்.

அப்போது சுவற்றில் மோதி கமலக்கண்ணன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டெல்லா அவரது உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி மேம்பாலத்தின் அருகில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் வீசியுள்ளார். பின்னர் அந்த வழியே துர்நாற்றம் வீசுவதை பார்த்த ஊர் மக்கள் அருகில் சென்று பார்த்தபோது அங்கு சடலம் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திங்கட்கிழமை இரவு அன்று மேம்பாலம் அருகிலுள்ள கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட ஆண் சடலத்தை போலீசார் மீட்டு இறந்தது யார் என்று விசாரணையை தொடங்கினார். 

விசாரணையில் இறந்துகிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் அவரது மனைவி ஸ்டெல்லாவிடம் விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் காத்திருந்தது. விசாரணையின் முடிவில் அவரது மனைவிதான் இந்த கொலையை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் இக்கொலை சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டுள்ளனர். என்று கேட்டபோது இதில் தனது சகோதரி ஜெரினா  ஜெரினாவின் கள்ளக்காதலன் தமிழ்மணி ஆகியோரின் உதவியுடன் கமலக்கண்ணனை சாக்குப்பையில் கட்டி கழிவுநீர் வாய்க்காலில் வீசியதாக ஸ்டெல்லா போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரது மனைவி மற்றும் இருவரைத் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.