கணவன் சடலத்துடன் குடும்பம் நடத்திய மனைவி! விருதுநகர் பயங்கரம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்திய கணவனை கயிற்றால் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, பல நாட்களாக பூட்டிய வீட்டில் மறைத்து வைத்ததற்காக அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கு அதே பகுதியில் அடுத்தடுத்த இரு வீடுகள்  சொந்தமாக உள்ளது. முதலில் அதை வாடகைக்கு விட்டு வந்தனர் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் வேறு ஒரு வீட்டிற்குச் சென்று விட்டதால் வீடு சில நாட்கள் பூட்டி நிலையில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே இவர்கள் வசித்த வீடு  பூட்டிக் கிடந்ததோடு பாண்டீஸ்வரி குழந்தைகளுடன் பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். ஆனால் அவ்வப்போது தனது வீட்டுக்குள் மர்மமான முறையில் பாண்டீஸ்வரி சென்று வந்தார். இந்நிலையில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து விசாரித்த அக்கம்பக்கத்தினர் பூட்டப்பட்ட வீட்டை திறந்து பார்த்தபோது அங்கு ஆறுமுகத்தின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே அருகில் உள்ள காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் பாண்டீஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டபோது போலீசாரிடம் அவர் பதட்டத்துடன் போலீசாரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் . இதனால் சந்தேகத்தை போலீசார் மேலும் தெரிவித்தவை விசாரிக்க ஆரம்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து பாண்டீஸ்வரி போலீசாரிடம் கூறியதாவது தனது கணவன் தன்னை குடித்துவிட்டு துன்புறுத்தி வந்ததால் ஆத்திரத்தில் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வப்போது சென்று தனது கணவன் உடலை பார்த்து அழுதும் வந்துள்ளார். இதையடுத்து பாண்டீஸ்வரியை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.