உல்லாசத்துக்கு மறுப்பு! இளைஞனுடன் தொடர்பு! தட்டு வண்டிக்காரனின் கள்ளக் காதலிக்கு நேர்ந்த விபரீதம்!

புதுச்சேரி அருகே கள்ளக்காதலியை கொலை செய்து தலைமறைவாக இருந்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.


புதுச்சேரி குமரகுருபள்ளத்தை சேர்ந்த கீதா கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதற்கு காரணம் அருகே தட்டு வண்டிக் கடை வைத்திருந்த ஆனந்த் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக் காதல் ஆகும். 

கணவர் பிரிந்த பிறகு ஜெயராம் நகரில் வயது வந்த பிள்ளைகளுடன் கீதா வசித்து வந்தார். கள்ளக் காதலன் ஆனந்த் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் கீதாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆனந்த் உல்லாசத்துக்கு அழைத்த போது கீதா வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்து ஆனந்த் சனிக்கிழமை கீதாவை நடு ரோட்டில் வைத்து குத்தி கொடூரமாக கொலை செய்தார்.

தலைமறைவான ஆனந்ததை போலீசார் வந்தனர். இந்நிலையில் கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை அருகேயுள்ள அவரது வீட்டில் ஆனந்தை கைது செய்த போலீசார், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்