படுக்கை அறையில் ஆண்களிடம் இருந்து பெண்கள் மறைக்கும் 11 ரகசியங்கள்! என்னென்ன தெரியுமா?

உங்களின் காதலி அல்லது மனைவி என்னதான் உங்களிடம் வெளிப்படையாக மனம் விட்டு பேசினாலும், சில விஷயங்களை அவர்கள் எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள் என்று உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


11 வித ரகசியங்களை உங்களை துணை எப்போதும் உங்களிடம் பகிர்ந்துகொள்வதில்லை எனவும் தெரிவிக்கிறார்கள். அதற்குக் காரணம் சில ரகசியங்கள் ரகசியமாய் இருக்கும் வரைதான் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். இது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொருந்தும்.  

முன்னால் காதலர்களை பற்றிக் பெண்கள் கூறும்போது மேலோட்டமாகத்தான் கூறுவார்கள். ஏனெனில் இது திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியும். இது உண்மையாகவும் பொய்யாகவும் இருக்கலாம்.  

பொதுவாக பெண்களும் ஆண்களை போலவே பாலியல் உறவில் பெண்களும் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஆனால் ஆனால் அதை வெளிப்படையாக கூற மாட்டார்கள். கணவர் பாலியல் உறவில் திருப்திப்படுத்தவில்லை என்றாலும் அதை கூறாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள்.  பெண்களும் ஆபாசப்படங்கள் பார்க்கக் கூடியவர்கள்தான். இது கணவருக்கு தெரிந்தால் தன்னுடைய அடையாளத்தை தவறாக சித்தரிக்கும் என்பதால் அதை கூறமாட்டார்கள்.  

உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை பற்றி என்ன நினைக்கிறார் என்று உங்கள் துணைவி கூறமாட்டார். காரணம் இல்வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தலாம் என அஞ்சுகிறார்கள்.  குடும்பத்தினர் கணவரைப் பற்றி நல்ல விதமாக நினைத்தால் உடனடியாக கூறிவிடுவார்கள். எதிர்மறையாக நினைத்தால் வெளிப்படுத்தமாட்டார்கள்.  

பெண்கள் தங்களின் கணவர் தங்களை ரசிப்பதையும், தங்கள் மீது பொறாமைப்பட்டு அவதிப்படுவதையும் ரகசியமாக ரசிப்பார்கள். அதனை வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள்.  கணவர் அணியும் உடையோ அல்லது அவர்களின் ஹேர்கட்டோ பிடிக்கவில்லை என்றாலோ அதை சொல்லாமல் ரகசியமாக வைத்திருப்பார்கள். 

தங்களுக்கு இருக்கும் சில தீய பழக்கங்கள், குழந்தைத்தனமான பழக்கங்களை பெண்கள் எப்பொழுதும் ரகசியமாகத்தான் வைத்திருப்பார்கள். இதனால் கணவரின் கேலிக்கு ஆளாக நேரிடுமோ என்பதால் வெளியில் சொல்வதில்லை.  

பெண்கள் ஷாப்பிங்கில் தாங்கள் வாங்கும் பல பொருட்களை கணவரிடம் இருந்து மறைத்து வைத்திருப்பார்கள்.  பிற ஆண்களை ரசிப்பது பற்றி பெண்கள் ஒருபோதும் தங்கள் கணவரிடம் கூறுவதில்லை என்று ஆய்வுகள் கூறுகிறது.  

பெண்கள் தங்கள் கணவரின் பொருட்களை எப்போதும் சோதனை செய்து பார்ப்பார்கள். ஏதேனும் தவறாக கிடைத்தால் மட்டுமே கேட்பார்கள். இல்லையெனில் அவர்கள் சோதனை செய்வது ரகசியமாகவேத்தான் இருக்கும்.