நண்பனின் மனைவியை உஷார் செய்த இளைஞன்! இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்!

நண்பனின் மனைவியை உஷார் செய்து இன்ப சுற்றுலா வந்த கள்ளக்காதலனுக்கு விபரீத முடிவு ஏற்பட்டுள்ளது.


மதுரை கிருஷ்ணாபுரம் 3வது தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ் . இவருக்கு அவருடைய நண்பரின் மனைவியுடன்  கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உல்லாசமாக இருக்கும் இருவரும் ராமேஸ்வரம் வந்துள்ளனர்.

ராமேஸ்வரத்திற்க்கு வந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் அங்குள்ள சுற்றுலா தளங்களை  இருவரும் பார்த்து விட்டு  இன்று பாம்பன் பாலத்திற்க்கு சென்றுள்ளனர். 

அப்போது வெங்கடேஷ் மட்டும்  திடீரென பாம்பன் பாலத்தில் இருந்த கடலில் குதித்துள்ளார். இதனை பார்த்து பதறிய கள்ளக்காதலி உடனடியாக அருகாமையில் இருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளார். அவர்கள் கடலில் குதித்து வெங்கடேசை காப்பாற்றினர்.

 விசாரணையில் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் வெங்கடேஷ் மட்டும் குதித்துள்ளார். இதனால் பயந்து போன கள்ளக்காதலி குதிக்காமல் தப்பியது தெரியவந்தது.

இதனிடையே வெங்கடேஷ் யை காணவில்லை என அவரது மனைவி மதுரையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மதுரை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.