தலைமுடியை வெட்டி, ஆடைகளை களைந்து மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை! அதிர வைக்கும் காரணம்!

சுக்மா: உறவினருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி, தலைமுடியை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடெர்மா மாவட்டத்தில் உள்ள தேன்கோடிஹ் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு இத்தகைய துன்பம் நேர்ந்துள்ளது. இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கணவர் வெளியூர் சென்றுவிட்டாராம். அந்த நேரத்தில் தனது மைத்துனருடன் அப்பெண், கள்ளத்தொடர்பு ஏற்படுத்தியுள்ளார். 

இதுபற்றி அந்த பெண்ணே, சில நாள் முன்பாக, தனது தோழிகள் சிலரிடம் கூறியுள்ளார். அவர்களோ, இவர்களின் கள்ளக்காதலை திருமண உறவாக மாற்ற உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் புகார் செய்துள்ளனர்.

பெண்ணின் கணவர் ஊர் திரும்பிய நிலையில், இதுபற்றி தெரியவந்ததும் உடனடியாக, அவரும் பஞ்சாயத்து தலைவர்களுடன் சேர்ந்து, அந்த பெண்ணை வரவழைத்து, ஊர் முன்னிலையில் அடித்து உதைத்து, நிர்வாணப்படுத்தியதோடு,  அவரது தலைமுடியையும் அறுத்து கொடுமை செய்துள்ளனர்.  

இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள் சிலர் போலீசில் புகார் செய்தனர். கிராம பஞ்சாயத்து தலைவர்களின்  அட்டூழியம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.