கணவன் கண்முன்னே மனைவியுடன் உல்லாசம்! 5 பேர் அரங்கேற்றிய கொடூரம்!

புதுடெல்லி: கணவனின் கண் முன்னே மனைவியை 5 இளைஞர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம், ஆழ்வார் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள லால்வாடி கிராமத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் தலவிருக்‌ஷா பகுதிக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, 5 இளைஞர்கள் அவர்களை வழிமறித்து, ஆளில்லா மறைவிடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதன்பின், பெண்ணின் கணவனை 2 இளைஞர்கள் சராமரியாக அடிக்க, மற்ற 3 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இதேபோல சுழற்சி முறையில் பலாத்காரம் செய்த, அந்த கொடூர இளைஞர்கள், இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. 

இதன்பேரில், காஜி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். வீடியோவில் நடைபெறும் பேச்சின் அடிப்படையில், குறிப்பிட்ட 5 இளைஞர்களின் பெயரையும், அங்க அடையாளத்தையும் கண்டுகொண்ட போலீசார், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.