பப்ஜி விளையாட தடை! கணவனை டைவர்ஸ் செய்யும் இளம் மனைவி! எங்க தெரியுமா?

பப்ஜி விளையாட எதிர்ப்பு தெரிவிப்பதால் கணவனை விவாகரத்து செய்யப் போவதாக, மனைவி கூறியுள்ளார்.


அகமதாபாத்தைச் சேர்ந்த 19 வயது பெண்தான் இப்படி புகார் தெரிவித்துள்ளார். அவருக்கு திருமணமாகி, ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பிற்கான  181 அவசர எண்ணை தொடர்புகொண்ட அந்த பெண், தனக்கு உடனடியாக விவாகரத்து வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.

அத்துடன், தனது கணவர் வீட்டிலும், சொந்த வீட்டிலும் பப்ஜி விளையாட எல்லோரும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அடிக்கடி செல்ஃபோனை பிடுங்கி வைத்தும் மிரட்டுகின்றனர். இதனால், அவர்களிடம் இருந்து விடுதலை பெறும் வகையில், ஏதேனும் மகளிர் காப்பகத்தில் தன்னை சேர்த்துவிடும்படியும் அந்த பெண் கோரியுள்ளார்.

நாள் முழுக்க, தனது ஆன்லைன் துணையுடன் சேர்ந்து, பப்ஜி விளையாடினால் போதும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு, தேவையான மனநல ஆலோசனை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, பெண்களுக்கான அவசர உதவி எண் 181 மைய நிர்வாகி ஃபல்குனி படேல் தெரிவித்துள்ளார்.