கணவன் திடீர் மரணம்! காலடியில் விழுந்த காதல் மனைவி! பிறகு நேர்ந்த நெகிழ வைக்கும் சம்பவம்!

கோவை அருகே கணவன் உடல் நலக் குறைவால் உயிரிழந்த துயரம் தாளாமல் அவரது காலடியிலெயே மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி - ஜீவா தம்பதி. திருமணமாகி 50 ஆண்டுகள் காதல் மணவாழ்க்கை இனிமையாகவே அமைந்தது. ஆனால் கண்பட்ட குறை போலும் திருப்பதி திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணம் அடைந்தார். 

கணவனின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறியழுத ஜீவா, அஞ்சலிக்காக வைக்கப்பட்ட திருப்பதியின் உடல் அருகே திடீரென மயங்கி விழுந்தார் . உடனடியாக அவரை பரிசோதித்த போது அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கணவர் திருப்பதியின் உடல் அருகிலேயே மனைவி ஜீவாவின் உடலும் அஞ்சலிக்காக வைக்கபட்டவர் 

வீடுவரை உறவு, வீதி வரை மனைவி என்பதை உடைத்து கடைசி வரை மனைவி என்ற புது வரலாறு படைத்த ஜீவாவை கணவருடன் சேர்த்து அனைவரும் கண்ணீர் மல்க வழியனுப்பிவைத்தனர்.