மனைவி உயிரிழந்து சில நாட்கள்! கழுத்தை கரகரவென கத்தியால் அறுத்துக் கொண்ட கணவன்! நொடியில் அரங்கேறிய பயங்கரம்! பதற வைக்கும் காரணம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைவி இறந்த சோகத்தில் அவரது கணவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரையைச் சேர்ந்தவர் சுப்பையா, இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கருப்பாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது கணவர் சுப்பையா கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

சுப்பையா மற்றும் கருப்பாயி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மூவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மூவரும் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கருப்பயி மற்றும் சுப்பையா இருவரும் தனிமையில் தான் வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் யாரும் சரியாக கவனித்து கொள்ளாத நிலையில் திடீரென கருப்பாயிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சுப்பையா மருத்துவ செலவுகளை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பாயி இருந்துள்ளார்.

இதையடுத்து மனைவி இருந்ததை தாங்கிக் கொள்ளாத சுப்பையா உறவினர்களிடம் என் மனைவி இறந்துவிட்டால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை இனி என் மகன் மருமகள்கள் யாரும் தனக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் எனவும் என் மனைவி சென்ற இடத்திற்கே தானும் சென்று விடுவதாக உறவினர்களிடம் புலம்பித் திரிந்துள்ளார்.  

இந்நிலையில் மிகுந்த விரக்தியில் இருந்த சுப்பையா திடீரென கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டு மயக்கம் அடைந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து சுப்பையாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு இருந்தவர்களிடம் கேட்ட போது கணவன் மனைவி இருவரும் நன்றாக வசித்து வந்தார்கள் எனவும் அவரது மகன் மற்றும் மருமகள் அவர்களை கண்டு கொள்வதில்லை தினமும் வேலைக்கு சென்று வரும் கூலிகள் தான் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளதாகவும் மனைவி இறந்த சோகத்தில் சுப்பையா சரியாக சாப்பிடுவதில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற சுப்பையா தற்போது மருத்துவமனையில் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.