போலி ஸ்மார்ட் கார்டு தயாரித்த கணவன் பற்றிய உண்மையை அவரது மனைவியே, வெளியில் சொல்லியுள்ளார்.
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் கணவனின் தகாத செயல்! புட்டு புட்டு வைத்த மனைவி!

திண்டுக்கல் அருகே புதுநகரைச் சேர்ந்தவர் குமரேசன். இவர், உள்ளூரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், குமரேசன் பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாக, அவரது மனைவி ரெங்கநாயகி, புகார் எழுப்பியுள்ளார்.
குறிப்பாக, குமரேசன் போலியாக ஸ்மார்ட் கார்டுகளை தயாரித்து, அதன்மூலமாக, மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை முறைகேடு செய்து, கள்ளச்சந்தையில் விற்று காசு சம்பாதித்து வருகிறாராம். அதுவும் சமீபத்தில் வழங்கிய பொங்கல் பரிசை, குமரேசன் கையாடல் செய்திருக்கிறார்.
அவர் கையாடல் செய்த தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கும் என்றும், அவரது மனைவி ரெங்கநாயகி குறிப்பிடுகிறார். உடனடியாக, போலீசார் நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கணவன் கொள்ளையடித்தால், சத்தமின்றி பீரோவில் வாங்கி வைத்துக் கொள்ளும் மனைவிகள் வாழும் இந்த நாட்டில், கணவனின் முறைகேட்டை வெளிப்படுத்திய மனைவியின் நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.