கணவனை கடித்த ஒட்டகம்..! ஆத்திரத்தில் ஒட்டகத்தின் அந்த உறுப்பை கடித்த மனைவி..! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்..!

லூசியானா: தனது கணவனை கடித்த ஒட்டகத்தை பழிவாங்குவதற்காக, அதன் கவட்டையை பிடித்து மனைவி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு, குளோரியா  லான்செஸ்டர் மற்றும் அவரது கணவர் எட்மண்ட் ஆகியோர் சென்றனர். அவர்களுடன், அவர்களது வளர்ப்பு நாய் ஒன்றும் இருந்தது.

ஒட்டகம் ஒன்றை பார்க்க மிக அருகில் சென்றபோது, அவர்களது வளர்ப்பு நாய் திடீரென கூண்டிற்குள் நுழைந்து, ஒட்டகத்தின் காலடியில் படுத்துக் கொண்டுவிட்டதாம். இதனை காப்பாற்றுவதற்காக, குளோரியா ஒட்டகத்தின் அருகில் சென்றிருக்கிறார்.

இப்படியாக, நாயும், குளோரியாவும் ஒட்டகத்தின் அடியில் நிற்க, இதைக் கவனிக்காத ஒட்டகம் திடீரென அவர்கள் மேலே அப்படியே உட்கார்ந்துவிட்டதாம். உடனடியாக, தப்பிக்க யோசித்த குளோரியா, ஒட்டகம் என்றும் பாராமல் அதன் கவட்டையை அதாவது, விதைப்பையை பிடித்து நறுக்கென்று கடித்துள்ளார்.

வலி தாங்காமல் ஒட்டகம் அலறவே, நாயை எடுத்துக் கொண்டு குளோரியா தப்பியோடிவிட்டார்.  குளோரியா கடித்ததால் அந்த ஒட்டகத்திற்கு விதைப்பையில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்பேரில் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து வரும் மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர், பார்வையாளர்கள் ஒட்டகத்தின் அருகே எப்படி செல்ல முடிந்தது என்பது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.