வீட்டுல இருந்த மிக்சிய எங்கடா? கணவனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி! அதிர்ச்சி காரணம்!

திருப்பூர் அருகே குடிப்பழக்கம் முற்றிய நிலையில் கணவர் வீட்டில் இருந்த மிக்சியை திருட்டு தனமாக விற்று, சிக்கன் மற்ற சரக்கு சாங்கியதால் ஆத்திரமடைந்த மனைவி கட்டையால் கணவனை தலையில் அடித்து கொன்று விட்டு பைக்கில் இருந்து கீழே விழுந்து இறந்து போனதாக நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் , மங்கலம் அருகே வெங்கடேஷ்வரன் - உமாதேவி தம்பதியினருக்கு திருமணமாகி 29 வயதில் மகன் உள்ள நிலையில், இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைப் பார்த்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக , பைக்கில் இருந்து கணவர் வெங்கடேஷ்சரன் கீழே விழுந்து விட்டதாக கூறி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். 

உடல் கூறு ஆய்வின் போது அவர் இறப்பு விபத்து இல்லை எனவும் யாரோ தலையில் பலமாக தாக்கி கொலை செய்துள்ளதாகவும் ரிப்போர்ட் அடிப்படையில் போலீசார் சந்தேகம் அவரது மனைவி உமாதேவி பக்கம் திரும்ப,  அவரது மனைவியை விசாரித்த போது, கணவர் குடிக்க பணம் இல்லாமல் மிக்சியை விற்று சிக்கனும், சரக்கும் வாங்கியதும், இது குறித்து கேட்ட போது கோவத்தில் கட்டையை தலையில் அடித்தபோது, எதிர்பாராத விதமாக கணவர் மயங்கி கீழே விழ பயந்து பின் உமாதேவி விபத்து என நாடகமாடியது அம்பலம் ஆனது.

இதனை அடுத்து உமாதேவி கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது