குழந்தை படிக்கணும்ங்க! பணம் கேட்ட மனைவி! பெற்ற மகள் முன்னிலையில் கணவன் அரங்கேற்றிய கொடூரம்!

சென்னை நீலாங்கரையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரில் தனசேகர் அகிலா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.


இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள். திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கணவருடன் சேர்ந்து வாழாததால் தனது குழந்தையுடன் சென்னை தரமணியில் உள்ள அண்ணன் வீட்டில் வசித்து வந்தார்.

என்னதான் அகிலா அண்ணன் நிழலில் அவரது வீட்டில் வசித்தாலும் குழந்தைக்கு படிப்புக்கான செலவை அடிக்கடி கேட்டு தொல்லை செய்ய முடியாது என்பதால் மீண்டும் கணவர் தனசேகர் உதவியை நாடியுள்ளார் அகிலா. நீண்ட நாட்களுக்கு பிறகு உதவி கேட்டு வந்த அகிலாவை சரமாரியாக கணவர் திட்டியதாக கூறப்படுகிறது .

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற சண்டை கைகலப்பு வரை சென்றது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தனசேகர் தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அவசரத்தில் தவறு செய்து விட்டோமே என்று பயந்து போன தனசேகர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .

தகவலறிந்து வந்த போலீசார் அகிலாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் . மேலும் வழக்கு பதிந்த போலீசார் மனைவியை கொன்றுவிட்டு தப்பி சென்றுவிட்டது தனசேகரின் தேடி வருகின்றனர்.

உயிரிழந்த நிலையில் தந்தையும் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டதால் சமுதாயத்தில் எதிர்காலக் கனவுகளுடன் வாழ்ந்த அந்த சிறுமியும் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.