சாவிலும் இணை பிரியா பிணைப்பு! மனைவி மரணித்த சில நிமிடங்களில் கணவனையும் அழைத்த மரணம்! நெகிழ வைக்கும் சம்பவம்!

சிவகங்கை மாவட்டத்தில் இறந்த சிறிது நேரத்தில் கணவரும் இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் , வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


சிவகங்கை மாவட்டத்தின் ஆலப்பட்டு பகுதியில் வசித்து வரும் காசி - சரோஜா தம்பதியினர் திருமணமாகி 5 பிள்ளைகளை பெற்று வளர்த்துள்ளனர். மகள்கள் மூவரும் திருமணமாகி வாழ்ந்து வரும் நிலையில், இரு மகன்கள் வெளிநாட்டில் தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர். 

இதற்கிடையில் காசி - சரோஜா வயதான நிலையிலும் அதிக அன்புடன் இருந்துள்ளனர், இதனை அடுத்து வயது முதிர்வுக்காரணமாக மனைவி சரோஜா , கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இந்த அதிர்ச்சியில் கணவன் காசியும் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.