மனைவி கழுத்தை நெறிக்க! கள்ளக் காதலன் கட்டையால் அடிக்க! சல்லாபத்தை நேரில் பார்த்த ஜெயராமுடுக்கு நேர்ந்த விபரீதம்!

ஆந்திராவில் கள்ளக்காதலை பார்த்து விட்ட கணவணை காலனிடம் அனுப்ப மனைவி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கணவர் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.


ஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டத்தில் உள்ள எம்மிகிராமம் என்ற சிறிய குக்கிராமம். இங்கு ஜெயராமுடு மற்றும் அவரது மனைவி ஜோதி வசித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த ராமா என்பவருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகையின் வாசம் அவரை சுண்டி இழுத்தது. ஜெயராமுடுவின் மனைவி மேல் ஆசை கொண்ட ராமா கணவர் இல்லாத சமயங்களில் ஜோதியிடம் பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

பின்னர் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதை பார்த்த ஊர் மக்கள் அவரது கணவர் ஜெயராமுடுவிடம் போட்டுக் கொடுத்துள்ளனர். முதலில் ஊர் மக்கள் சொல்வதை நம்பாத அப்பாவி கணவன் பின்னர் ஒருநாள் ராமாவும் தனது மனைவி ஜோதியும் வீட்டில் தனிமையில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பேசியதற்கே அதிர்ச்சி அடைந்தாரா என்றெல்லாம் கேட்காதீர்கள்.  

அதையடுத்து எம்மிகிராமத்தில் உள்ள பஞ்சாயத்து கூட்டப்பட்டு ஜெயராமுடு, ஜோதி மற்றும் ராமாவை கிராம தலைவர்கள் விசாரித்ததை அடுத்து வேறு வழியின்றி அந்த கள்ளக் காதல் ஜோடி ஒப்புக் கொண்டது. பின்னர் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனாலும் ராமா விடுவதாக இல்லை. ஜெயராமுடு விவசாயம் செய்ய செல்லும்போதேல்லாம் ஜோதியை சந்திப்பதை தொடர்ந்துள்ளார்.

பின்னர் ஒரு நாள் ஜோதி அழைத்ததின் பேரில் அவரது வீட்டிற்கு சென்ற ராமா அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் வந்த ஜெயராமுடு இருவரும் கட்டிலில் ஒன்றாக உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆத்திரத்தில் இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்ட முயன்றார் ஜெயராமுடு.

கணவர் சுதாரிப்பதற்குள் அவரை கண்டேமேனிக்கு தாக்கினார் ஜோதி. பின்னர் கண்கண்ட தெய்வமான கணவரின் கழுத்தை ஜோதி நெரிக்க புதுக் காதலன் ராமாவும் அவரை கட்டையால் தாக்கி உள்ளார். இதனால் அலறி அடித்த ஜெயராமுடு உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என வேகமாக ஓடிச் சென்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

மேலும் தன்னுடைய உயிரை மனைவியிடம் இருந்து காப்பாற்றுமாறும் கெஞ்சி கூத்தாடினார் ஜெயராமுடு. அவர் கண்ணீருடன் கெஞ்சியதை பார்த்த போலீசாரே இரக்கப்பட்டு விட்டனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கணவரை காலனிடம் அனுப்ப முயன்ற மனைவியையும் அவரது புதுக் காதலனையும் தேடி வருகிறது போலீஸ்