கணவனை பிரிந்து 9 மாதத்திற்கு பிறகு மனைவி செய்த பகீர் செயல்! நேரில் பார்த்து கதறிய பிள்ளைகள்! விருதுநகர் பயங்கரம்!

கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்த மனைவி தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிர் இழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு அஸ்வினி மகள் இருக்கிறார். இவருக்கு அருணாச்சலம் என்பவருடன் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக அஸ்வினி அவரது மாமியார் வீட்டாருடன் ஏற்பட்ட சண்டை சச்சரவு காரணமாக தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார். 

இந்நிலையில் நேற்று காலை அவரது அறைக்குள் குழந்தைகள் அழும் சத்தம் கேட்டிருக்கிறது. குழந்தைகள் நீண்டநேரமாக அழும் சத்தம் கேட்ட அஸ்வினியின் தந்தை கதவை உடைத்து உள்ளே பார்க்கையில் அஸ்வினி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதைக்கண்ட தந்தை அதிர்ச்சியில் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், அஸ்வினி தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தனது தற்கொலைக்கு மாமனார், மாமியார் மற்றும் கணவரின் தங்கை ஆகியோர் தான் காரணம் என எழுதி வைத்துள்ளார். 

இதன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.