கணவன், குழந்தைக்கு மயக்க மருந்து! கள்ளக் காதல் ருசியில் மனைவி அரங்கேற்றிய விபரீதம்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

திருச்சி: கணவரை ஏமாற்றி காலேஜ் படிக்கப் போன பெண், முன்னாள் காதலனுடன் எஸ்கேப் ஆன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி என்ற ஊர் உள்ளது. இங்கு கனகராஜ் என்பவர் ஓட்டல் தொழில் செய்துவருகிறார். கனகராஜ் சென்னையிலும் ஒரு ஓட்டல் வைத்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பாக, இவருக்கு, துறையூர் அருகே உள்ள கீராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை, பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சரண்யா மேற்படிப்பு படிக்க விரும்புவதாக, கனகராஜிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய கனகராஜ், மனைவியை மேற்படிப்பு படிக்க அனுப்பி வைத்தார். இந்நிலையில் ஒருநாள் கனகராஜின் செல்ஃபோனை தொடர்புகொண்ட ஒரு பெண், அவரது மனைவி சரண்யாவின் நடத்தை பற்றி புகார் கூறியிருக்கிறார்.

இதன்பேரில், சரண்யாவின் செல்ஃபோனை ஆய்வு செய்த கனகராஜ், அதில் வேறொரு இளைஞருடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை விசாரித்தபோது, அந்த இளைஞரை சிறு வயதில் இருந்தே காதலிப்பதாகவும், பெற்றோரின் வற்புறுத்தலால் உங்களை திருமணம் செய்துகொள்ள நேரிட்டது எனவும், சரண்யா தெரிவித்துள்ளார்.

மேலும், இனிமேல் இப்படி தப்பு நடக்காது என்று கூறி, கணவனை சமாதானம் செய்துவிட்டார். ஆனால், திடீரென ஒருநாள் அனைவருக்கும் மயக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு, தனது குழந்தையையும் எடுத்துக் கொண்டு, சரண்யா தலைமறைவாகிவிட்டார். 

இதன்பேரில், கனகராஜ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், ஒருநாள் கனகராஜிற்கு ஒரு ஃபோன் வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சரண்யாவின் காதலன் செல்வம் என அறிமுகம் செய்துகொண்டார். உன் குழந்தையும், மனைவியும் வேண்டுமெனில் உடனே துறையூர் பேருந்து நிலையத்திற்கு வா, என்று கூறியிருக்கிறார்.

இதன்படி, விரைந்து சென்ற கனகராஜ், அங்கிருந்த சரண்யாவை தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்துள்ளார். இதை விசாரித்த போலீசாரிடம், 'எனக்கு கனகராஜ் மற்றும் அவரது குழந்தை வேண்டாம், காதலன் செல்வம்தான் வேண்டுமென, சரண்யா எழுதிக் கொடுத்தார்.

வேறு வழியின்றி, போலீசாரும் அவரை காதலனுடன் அனுப்பி வைத்துவிட்டு, இவ்வளவு நாள் தாலி கட்டி குடும்பம் நடத்திய கனகராஜை கையில் குழந்தையை கொடுத்து, தனியாக வழியனுப்பி வைத்தனர்.