தனிமையில் தவித்த விதவைப் பெண்..! ஆசை வார்த்தை கூறி கணவனின் தம்பி செய்த செயல்..!

விதவைப் பெண்ணிடம் ஏமாற்றி பணம் பறித்த உறவினர் மீது காவல் துறையினரிடம் புகார் அளிக்கப் பட்ட சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது.


ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியைச் சேர்ந்த ரேகா ராணி என்ற பெண்ணின் கணவர் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை. இந்நிலையில் ரேகா ராணியை உறவினர்கள் மறுமணம் செய்ய வற்புறுத்தியும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாக வசித்து வந்தார். 

ரேகா ராணி தனது வாழ்க்கையை பார்த்துக்கொள்ள வங்கி கணக்கில் சுமார் 7 இலட்சம் ரூபாய் வைத்திருந்தார். இதனை அறிந்த உறவினர், தான் தொழில் செய்து வருவதாகவும், உன்னிடம் இருக்கும் பணம் சும்மா தானே இருக்கிறது; என்னிடம் கொடு, நான் எனது நிறுவனத்தில் முதலீடு செய்து சில வருடங்களிலேயே இரட்டிப்பாக தருகிறேன் என கூறி இருக்கிறார்.  

உறவினர் என்பதால் நம்பி உதவி செய்த ரேகா ராணிக்கு நீண்ட நாட்களாகியும் பணம் குறித்து எந்த ஒரு பதிலும் இல்லை. பின்னர் தொலைபேசியில் அழைக்க முயற்சித்தும் பதில் இல்லை. இதனால், உறவினர் மோசடி செய்துவிட்டதாகவும் பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரியும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரேகா ராணி உறவினரின் நிறுவனத்திற்குச் சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.