சின்னமே இல்லாம ஏன் கட்சி நடத்துற? திருமாவை சீண்டும் ராமதாஸ்!

சின்னமே இல்லாமல் திருமாவளவன் ஏன் தனியாக கட்சி நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளை பெற்றுள்ள திருமாவளவன் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் தனித்து சின்னமான யானை சின்னத்துக்கு திருமாவளவன் ஓட்டு கேட்க உள்ளார்.

அதேசமயம் திமுக கூட்டணியில் விழுப்புரம் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெற்றிருந்தாலும் அந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் போட்டியிடுவார் என்று திருமாவளவன் கூறியிருந்தார். அந்த வகையில் விழுப்புரம் தொகுதியில் பாமக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நேரடி போட்டி நிலவுகிறது.

நேற்று விழுப்புரம் தொகுதியில் பாமக தனது வேட்பாளர் வடிவேல் ராவணன் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியதாவது.

சின்னமே இல்லாமல் ஒருவர் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு கட்சியின் சின்னத்தில் தனது வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார். இவரெல்லாம் ஏன் கட்சி நடத்த வேண்டும்?

பேசாமல் சின்னம் கொடுத்த கட்சியிலேயே சென்ற சேர்ந்து விடலாம் அல்லவா? இன்று திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார் ராமதாஸ். அச்சாரம் தீவிரம் அறியாத நிலையிலேயே ராமதாஸ் தேசிகர் தலைவர் திருமாவளவனை விமர்சித்திருப்பது விழுப்புரம் தொகுதிகளை கிளப்பியுள்ளது.