விஷத்தன்மையான அரளிச் செடியை வளர்ப்பது ஏன்? ஓபிஎஸ் கூறிய அடடே விளக்கம்!

தமிழக அரசு விஷத்தன்மை கொண்ட அரளிச் செடி வளர்ப்பது ஏன் என்பதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்அளித்துள்ளார்.


தேசிய நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியனில் அரளிச் செடியை பராமரிப்பாளர்கள் வளர்த்து வருகின்றனர். அரளிச் செடி விஷத்தன்மை கொண்டது. அப்படி இருக்க அதனை எப்படி சாலையில் வளர்க்கலாம் என்று கேள்வி எழுந்தது. தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அரளிச் செடிகளை வளர்ப்பது ஆபத்தானது என்று பலரும் விமர்சனங்களை எழுப்பினர். மேலும் தவறான முடிவுக்கு அரளிச் செடிகளை மக்கள் பயன்படுத்த நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் இந்த அரளிச் செடி விவகாரம் எதிரொலித்தது. நெடுஞ்சாலையில் எதற்காக அரளிச் செடி வளர்க்கிறிர்கள் என்று திமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரிந்து  கட்டிக் கொண்டு பதில் அளித்தார்.

அப்போது இரவு பயணத்தின் போது சென்டர் மீடியனில் அரளிச் செடி இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் விளக்கை எரியவிட்டபடி சென்றாலும் கார் ஓட்டுபவர்களுக்கு பிரச்சனை இருக்காமல் அரளிச் செடி பார்த்துக் கொள்ளும் என்றார். மேலும் கார்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு அரளிச் செடியால் உட்கிரகிப்பட்ட அதிக அளவில் ஆக்சிஜன் வெளியாகும் என்றும் அடேங்கப்பா விளக்க்ததை அளித்தார்.