நன்கொடை கேட்கிறார் மோடி. மக்கள் ஏன் கொடுக்க வேண்டும்? வைரல் பதிவு.

வாரத்தில் எட்டு நாட்கள் ஒவ்வொரு நாடாக சுற்றுவது அல்லது வெளிநாட்டு மந்திரிகளை இந்தியாவிற்கு கூட்டிவந்து சுற்றிக் காட்டுவதுதான் மோடியின் முழு நேர வேலை. அப்படி பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு, இப்போது மக்களிடம் நன்கொடை கேட்கிறார் மோடி.


அதனை எதிர்க்கும் ஒரு காமெடி பதிவு வைரலாகி வருகிறது. நீங்க வெளிநாடு சுத்துவீங்க, உங்களை நீங்களே கோடிக் கணக்கில் விளம்பரம் பண்ணுவீங்க... பட்டேலுக்கு 3000 கோடில சிலை வைப்பீங்க... அடானி, அம்பானி குடும்பத்துக்கு லட்சம் கோடி தள்ளுபடி பண்ணுவீங்க...

அஞ்சு லட்சம் கோடில குஜராத்துக்கு மும்பையில் இருந்து புல்லட் ரயில் விடுவீங்க. புதுசாக 20000 கோடில பாராளுமன்றக் கட்டிடம் கட்டுவீங்க... 136000 கோடி ஆர்பிஐ பணத்தையும் எடுத்து குஜால் பண்ணுவீங்க...

எலக்டொரல் பாண்ட் என்கின்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை வாரிச் சுருட்டுவீங்க.... ஒரு லட்சம் கோடி செலவுல என்ஆர்சி என்பிஆர் கணக்கெடுப்பீங்க.... 500 கோடி செலவுல ட்ரம்புக்கு வரவேற்பு நடத்துவீங்க....

25000 கோடில, இசுலாமியர்களை ஒதுக்கி வைக்க டிடென்ஷன் சென்டர் கட்டுவீங்க... 300 கோடி விலையுள்ள விமானத்தை ஆயிரம் கோடிக்கு வாங்குவீங்க...காங்கிரஸ் எம்எல்ஏ க்களை விலைக்கு வாங்க 5000 கோடி செலவு பண்ணுவீங்க......

ஊதாரித்தனமா, படோடாபமா எங்க வரிப்பணத்தை தூத்தெறிச்சுட்டு....இப்போ பிச்சை எடுக்கீங்க... எங்ககிட்ட இருந்தால் நாங்க ஏன் இப்புடி இருக்கோணும் ???