தமிழகத்தில் 13 வாக்குப் பதிவு மையங்களில் மறு வாக்குப் பதிவு ஏன் என்பதற்கான உண்மையான காரணத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
13 மையங்களில் வாக்குப் பதிவு ஏன்? சற்று முன் வெளியான உண்மையான காரணம்!

அதாவது மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை மாற்றி வைத்ததில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தேனி நாடாளுமன்ற தொகுதி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 197-ல் மறுவாக்குப் பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது-
திருவள்ளூர் மக்களவை தொகுதியின் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகளை அதிகாரிகள் அழிக்கத் தவறிவிட்டனர். இதனால் அங்கு வரும் 19ந் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் காங்கேயம் பகுதியில் உள்ள எண் 248 வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப் பதிவின் போது பதிவான வாக்குகளை அதிகாரிகள் அழிக்க மறந்துவிட்டனர். இதே போன்று தேனி நாடாளுமன்ற தொகுதி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 67-ல் மாதிரி வாக்குப் பதிவின் போது பதிவான வாக்குகளை அதிகாரிகள் அழிக்கவில்லை. இதனால் இந்த இரண்டு இடங்களிலும் மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற இருககிறது.
கடலூர் மக்களவை தொகுதியில் திருவதிகை எனும் பகுதியில் வாக்குச்சாவடி எண் 201ல் வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஒரு பட்டன் வாக்காளர்களுக்கு சரிவர தெரியவில்லை என்று புகார் வந்தது. ஆய்வில் புகார் சரியென தெரிந்ததால் மீண்டும் ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது-
தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவின் போது பிரச்சனை ஏற்பட்டது. முதியவர்கள் சிலர் தங்களுடன் உதவிக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வாக்களித்தனர். மேலும் சிலர் மற்றவர்களின் வாக்குகளை அளித்தனர். எனவே இங்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க முடியாத நிலை இருந்ததால் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.