ரஜினியை ஏன் சந்தித்தார் விக்னேஸ்வரன்..?

தமிழகத்துக்கு வரும் பிறநாட்டுத் தலைவர்கள் தமிழக முதல்வர் அல்லது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் போன்றவர்களை சந்திப்பதுதான் அரசியல் நடைமுறை. ஆனால், நடிகர் ரஜினிகாந்தை இலங்கை அரசியல்வாதி சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆம், தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்தார்.

குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையும் வேண்டும் என்பதுதான் விக்னேஸ்வரன் நிலைப்பாடு. இது குறித்து ரஜினியிடம் விளக்குவதற்காக சந்தித்தார் என்று சொல்லப்படுகிறது. மேலும், இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து விளக்கம் கொடுத்தாராம்.

இதுதவிர, ரஜினிகாந்தை இலங்கை வடக்கு மாகாணத்துக்கு வருமாறு நட்புமுறையில் அழைப்பும் விடுத்திருக்கிறாராம். ரஜினிக்கு இப்போது குடியுரிமை சட்டத்தில் என்ன புரிந்ததோ, தெரியவில்லையே?