மகளுக்காக கணவன் ராஜனுடன் வனிதா மோதுவது ஏன்? பின்னணியில் கோவை தொழில் அதிபர்!

மகளை முதலில் கணவனிடம் விட்டுக் கொடுத்த வனிதா தற்போது கணவனுடன் சண்டையிடுவதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.


கடந்த 2007ம் ஆண்டு ராஜனை வனிதா 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர். முதலில் குழந்தை வனிதாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

இந்த நிலையில் சினிமா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் வனிதா திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து திரைப்படம் ஒன்றை கூட எடுத்தனர். ஆனால் அந்த படம் படு தோல்வியை தழுவியது. இதனால் ராபர்ட் – வனிதா இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற போது தொழில் அதிபர் ஒருவருடன் வனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த அந்த தொழில் அதிபரின் பண்ணை வீட்டிலேயே குழந்தைகளுடன் வனிதா தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த ராஜன் தனது மகள் அங்கு இருக்க கூடாது என்று பிரச்சனை செய்தார்.

அப்போது தான் முதல் முறையாக ராஜன் காவல் நிலையத்தில் வனிதாவிற்கு எதிராக புகார் அளித்தார். மேலும் வனிதா கோவை தொழில் அதிபர் ஒருவர் அரவணைப்பில் இருப்பதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் சென்ற வழக்கின் இறுதியில் குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க வனிதாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் குழந்தையை ராஜன் பராமரித்து வந்தார். ஆனால் தந்தையின் சொத்தை அடைய வேண்டும் என்றால் மகள் தேவை என்று அவரை சென்னை அழைத்துவந்துள்ளார் வனிதா. அந்த சொத்துகள் மீது ராஜனுக்கும் கண் இருப்பதால் தான் தற்போது மகளுக்காக அவர் சென்னை வந்ததாக சொல்கிறார்கள். 

இதனால் தான் மகள் கூட தந்தையுடன் செல்ல மறுத்து தாயுடன் இருப்பதாக கூறிவிட்டதாகவும் கூறிக் கொள்கிறார்கள்.