கமல் வெத்து வேட்டு! எட்டாவது கட்சிக்கு இத்தனை பேச்சா? வெளுக்கும் எழுத்தாளர்!

வெறும் 3.9% ஓட்டெல்லாம் வாங்கிவிட்டு,அடுத்த முதல்வர் என்று அடுத்தவரை பேசவைத்து ரசிப்பது அசிங்கமாகப் படவில்லையா என்று கமல்ஹாசனைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.


‘கமல்ஹாசன் குறித்து மேலும் அவர் கூறியிருக்கும் கருத்துக்களைப் பார்க்கலாம்.‘40 வருட நாடறிந்த மிகப் பெரிய நடிகரின் ரசிகர்கள் மட்டுமே ஓட்டுப் போட்டிருந்தால் கூட,இவ்வளவு மோசமான தோல்வி தவிர்க்கப்பட்டிருக்கும். மீடியாக்கள் அவருக்குத் தந்த வெளிச்சத்திற்கு அவர் குறைந்தது 10% மாவது வாங்கியிருக்க வேண்டும். 

பிறந்து வளர்ந்த சொந்த ஊரான பரமக்குடியிலேயே கூட 5155 ஓட்டுகள் மட்டுமே பெறமுடிந்துள்ளது.  காரணம், அவர் தன் சொந்த ஊருக்கு இது வரை எதுவுமே செய்ததில்லை என்கிறார்கள்.அவர் படித்த பள்ளியின் ஆசிரியர்கள் அவரை சென்னை வந்து பலமுறை சந்தித்து,பள்ளிக்கு சில அடிப்படை வசதிகளூக்கு உதவும்படி கோரிக்கை வைத்து அலையோ, அலையென அழைந்ததுதான் கண்ட பலன்!

கமலஹாசனை பொறுத்த வரை தன்னிடம் உழைப்பவர்களை கசக்கி பிழிந்து வேலை வாங்குவதில் சமர்த்தர். ஆனால்,அடிமாட்டுச் சம்பளம் பேசி அதையும் கூட ஒழுங்காக தரமாட்டார் என்பது திரையுலகில் பலதரப்பினரும் சொல்லி கேள்விப் பட்டுள்ளேன். ஒரு தலைவருக்கான அடிப்படைப் பண்பே, தன்னை நம்பி உழைப்பவர்கள் மீது அன்பும், அக்கரையும், கரிசனமும் காட்டுவது தான்!

விஜயகாந்த்த் முதல் தேர்தலிலேயே 8% வாக்குகள் வாங்கினார் என்றால்,அது அவருடைய உதவும் நல்ல உள்ளத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.அதே போல கட்சி தொடங்கிய 6 மாதத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெறமுடிந்ததற்கும் அவரது தயாளகுணமே காரணமாகும்!  ஏதோ நகரங்களில் உள்ள சில தொகுதிகளில் கணிசமான ஓட்டுகள் விழுந்துள்ளன என்பதற்காக இத்தனையித்தனை தொகுதிகளில் மூன்றாம் இடம் வந்துள்ளார்.. நான்காம் இடம் வந்துள்ளார் ...என்று அவரை இல்லாத உயரத்தில் வைத்து எழுதுகிறார்கள் சிலர்.

தெளிவாக சொல்ல வேண்டுமென்றால்,அவரது வாக்கு வங்கிப்படி (3.9%) தமிழகத்தில் அவரது கட்சிக்கு எட்டாவது இடம்தான் கிடைத்திருக்கிறது. இதைக் கொண்டு அவர் முதல்வர் பதவியை எட்டிப் பிடித்துவிடுவார் என்று பில்டப் செய்கிறார்கள் என்றால், அப்படிப்பட்டவர்களின் உள் அரசியலை நாம் உணர்ந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன்!’ என்கிறார்.

சரியாகத்தான் சொல்கிறார்.