முன்னாள் தி.மு.க. அமைச்சருக்கு இப்படியொரு நிலையா..? வருத்தத்தில் உடன் பிறப்புகள்

வட மாவட்டத்தைச் சேர்ந்த அந்த தி.மு.க.வின் முன்னாள் அமைச்சருக்கு இப்போது நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்து போய்விட்டதாம். தேர்தலில் போட்டியிடும் இவரால் ஓடியாடி ஓட்டு சேகரிக்க முடியவில்லை. இதனால் உடன் செல்பவர்கள் தலையிலடித்துக் கொள்கிறார்களாம்.


ஒரு காலத்தில் மைக் கிடைத்துவிட்டால் மணிக்கணக்கில் முழங்கியவருக்கு இப்போது சில நிமிடங்கள் பேசினாலே மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறதாம். என்ன பிரச்சனை? என விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்;

‘’ பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் எப்போதாவது பார்ட்டிகளில் கலந்து கொள்வார். நாளடைவில் தினந்தோறும் என்கிற அளவிற்கு அந்த பழக்கம் அதிகமானது. ஒரு கட்டத்தில் பகலிலேயே திறக்க ஆரம்பித்தாராம். குடும்பத்தினர் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இதனால் வீட்டில் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தன. ஆனால் இவரோ கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அரசியலில் தலையெடுத்துள்ள மகனும் ‘எக்கேடும் கெட்டுப் போகட்டும்’ என்று விட்டுவிட்டார்.

இதனால் நேரம் காலம் இல்லாமல் தாகசாந்தி செய்ததால் உடல் ரொம்பவே கெட்டுப் போய்விட்டது. ’எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே! ’என்கிற டயலாக் இப்போதைக்கு இவருக்குத்தான் பொருந்தும்’’ என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

தேர்தல் நேரத்தில் இப்படியாகிப் போச்சே என்று வருந்துகிறார்கள் உடன்பிறப்புகள்.