குலசை தசராவுக்கு மட்டும் ஏன் இத்தனை ஸ்பெஷல்? ஏன் இத்தனை வேடங்கள்?

தமிழகத்திலேயே தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுவது தூத்துக்குடி குலசையில்தான். இந்தப் பகுதியில் அடிக்கடி மக்களுக்கு அம்மை நோய் ஏற்படுவது வழக்கம்.


முத்துமுத்தாகத் தோன்றும் அம்மை நோயைத் தீர்க்கும் அன்பு அன்னையிடம் இருப்பதால், குலசை அம்மன் முத்தாரம்மன் என்று வழங்கப்பட்டாராம்.பக்தர்கள் விதவிதமாக வேடம் பூண்டு காணிக்கை எடுத்து அதனை அம்மனிடம் ஒப்படைப்பார்கள். ஒவ்வோர் ஆண்டும் இப்படி வேடமிடுபவர்கள் எண்ணிக்கையும், அதை காணும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருப்ப்பதுதான் ஆச்சர்யம்.

இப்படி வேடம் தரித்த பக்தர்கள் மற்றும் பல்வேறு கலைக்குழுவினருடன் அருகருகே உள்ள கிராமங்களுக்கு செல்வது வழக்கம். அங்குள்ள செல்வந்தர்கள் மற்றும் குலசை முத்தாரம்மனின் பக்தர்களின் வீடுகளில் தாரை தப்பட்டை முழங்க ஆடிப்பாடி அருளாசி வழங்குகிறார்கள். 

இப்படி வேடமிட்ட பக்தர்களுக்கு தங்கள் தகுதிக்கேற்ப பணத்தை மக்கள் காணிக்கையாக வழங்குவது உண்டு. காணிக்கை இல்லை என்று யாரும் சொல்வது இல்லையாம். இந்த பக்தர்களுக்குக் கொடுக்கும் பணத்தைப் போல் அன்னை ஆயிரம் மடங்கு திருப்பித் தருவாளாம். அதனால்தான் குலசை தசராவில் கலந்துகொள்ள இத்தனை மக்கள் போட்டி போடுகிறார்களாம். அடுத்த வருஷமாச்சும் போய்ப் பாருங்க.