ராமர் பிறந்தது நேபாளத்தில் என்றால், பாபர் மசூதியை இடித்தது எதற்காக..?

இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததற்கு முக்கிய காரணம் என்றால் ராமர்தான். ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் உறுதியாகச் சொல்லி, அதனை தகர்த்ததன் பின்னணியில்தான் பா.ஜ.க.வின் அரசியல் ஆட்டம் தோன்றியது.


அதையொட்டித்தான் சமீபத்தில் உச்ச நீதிமன்றமும் ராமர் பிறப்பில் தீர்ப்பு கொடுத்தது. இந்த நிலையில்தான், ‘ராமன் நேபாளத்தைச் சேர்ந்தவன், இந்தியர்கள் சொந்தம் கொண்டாடுவது அர்த்தமில்லாதது’ என்று நேபாள பிரதமர் சர்மா ஓலீ கூறியிருக்கிறார். இந்துக்களின் தேசமாக நேபாளம் கருதப்படுவதால், அவர் சொல்வது உண்மையாக வாய்ப்பிருக்குமோ என்று எண்ண வைக்கிறது.

அதேநேரம், இந்த உலகில் 300 விதமான ராமாயணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தாய்லாந்தில் உள்ள ராமாயணத்தின் அடிப்படையிலும் கொயில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று, இலங்கையிலும் அயோத்தி இருப்பதால், அதுதான் ராமர் பிறந்த இடம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

இப்போ, இதை எப்படி டீல் செய்வது என்று புரியாமல்தான் பா.ஜ.க. தடுமாறிவருகிறது.