நிலாவில் தண்ணீர் இல்லைன்னு தெரிஞ்சும் ஏன் தேடுறாங்க? சந்திரயானுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சந்திரனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பியிருக்கும் சந்திரயான் ராக்கெட் வெட்டிச்செலவு என்றும் குரல் எழுப்புகிறார்கள்.


ஏனென்றால், சந்திரனில் தண்ணீர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, நமக்கு எந்த வகையில் பயன்படப் போகிறது என்கிறார்கள். சந்திரனில் ஆய்வு செய்து வரும் அமெரிக்கா, ரஸ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று மட்டுமே சொல்லி வருகின்றன. அதற்கு ஆதாரமாக, நீரோட்டம் இருந்ததற்கான நீர் தடங்களை காட்டினர். இப்போது உறைந்த நிலையில் நீர் மூலக் கூறுகள் இருப்பதாக இந்தியா அறிவித்து இருக்கிறது.

நீர் இருந்தால்... அதற்கான வாய்ப்புகள் இருக்குமானால்,. அங்கு தாவரங்கள் இருக்க வேண்டும். ஆனால், ஆய்வு செய்யும் நாடுகளின் ஆய்வு நிறுவனங்களான இஸ்ரோவோ, நாசாவோ அங்கு தாவரங்கள் இருக்கின்றனவா இல்லையா என்ற கேள்விகளை எழுப்புவதும் இல்லை. அதற்கான பதில்களை அளிப்பதும் இல்லை.

தண்ணீர் இருந்தால் தாவரம் இருக்கும். தண்ணீரும் தாவரமும் இருந்தால் அங்கு காற்று இருக்கும். காற்று இருக்குமானால் அங்கு மேகங்கள் இருக்க வேண்டும். எனவே, தாவரம் இல்லை என்ற செய்தி ஒன்றே போதும் அங்கு தண்ணீருக்கான வாய்ப்பு இருக்கவே முடியாது என்று நிறுவுவதற்கு என்கிறார்கள். இப்படியெல்லாம் சொன்னா மட்டும் நம்ம சயின்டிஸ்ட் அவங்க வேலையை நிறுத்திடவா போறாங்க?