ப.சிதம்பரத்துக்காக ஏன் தமிழகம் பொங்கி எழவில்லை? ஜல்லிக்கட்டு மாட்டை விட கேவலமா சிதம்பரம்!

இன்று ப.சிதம்பரத்தை மத்திய அரசு விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது.


தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கிறது. மாபெரும் அறிவுஜீவி என்றாலும், சிதம்பரம் விவகாரத்தை ஏன் தமிழக மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கு இதுதான் பதில்.

சிதம்பரத்தினால் தமிழ்நாட்டிற்கோ, தமிழருக்கோ,  ஈழத்தமிழருக்கோ அவரால் பத்து பைசாவுக்குக்கூட பயன் இருந்ததில்லை. அதனால்தான் இவர் இருப்பதே பூமிக்குப் பாரம் என்று எடப்பாடி தெரிவித்தார்.

பல முறை அவரை வெல்ல வைத்த சிவகங்கைத் தொகுதிக்காகக்கூட அவர் சிறு துரும்பையும் கிள்ளிப்போட்டதில்லை.. காங்கிரஸ் தொண்டர்களைக்கூட மதித்ததில்லை. வெற்றி பெற்று அமைச்சரானால் மற்ற வடநாட்டு வாலாக்களைப் போல், அவரும் ஒரு டெல்லி சுல்தான். அவ்வளவுதான்

தமிழ்மக்களின் உணர்வையும், உரிமையும் காப்பதற்காக நடந்த வழக்குகள் பலவற்றில் தமிழருக்கு எதிராக வாதாடியவர் நளினி சிதம்பரம். அரசாங்கத்தை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகத் திருப்பிவிட்டதில் ப.சிதம்பரத்துக்கும் பெரும் பங்கிருக்கிறது. சுருங்கச் சொன்னால பா.ஜ.க. தலைவர்களுக்கும், சிதம்பரத்துக்கும் பெரிய வித்தியாசங்களொன்றுமில்லை..

தமிழ்நாட்டுக்கு அவர் எப்போதும் லக்கேஜ்தான். இந்த வழக்கு ஒரு மேல்மட்ட அரசியலின் மிரட்டல். திரைமறைவு பேதத்துக்கான வழிமுறை. அதனால், இதனைப் பெரும் அநீதியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பதவியிலிருந்தபோது இதைத்தான் அவர் செய்தார்..

ப.சிதம்பரம் யாருக்கெல்லாம் ஆதரவாக இருந்தாரோ, அந்தப் பெரு முதலாளிகள் அவரைக் காப்பாற்றுவார்கள். அதன் பெருவிலையாக ப.சிதம்பரம் பா.ஜ.க.வில் கூட சேரக்கூடும். அல்லது பா.ஜ.க. வழிகாட்டலில் ரஜனியின் கரத்தை வலுப்படுத்தக்கூடும்.

இது நடக்காது என்று சொல்லுமளவுக்கு அவரொன்றும் காங்கிரசுக்கு கற்போடு இருப்பவரில்லை.. ஏற்கனவே ஒரு முறை காங்கிரசிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர்தான். கட்சியை மிரட்டி மகனுக்கு எம்.பி.சீட் வாங்கியவர்தான். எனவே சிதம்பரம் பிரச்னை தமிழர் பிரச்னையல்ல..

அவரது தனிப்பட்ட பிரச்னைதான். அதனால்தான், தமிழர்கள் அவரை கண்டுகொள்ளவே இல்லை. ஜல்லிக்கட்டு மாட்டுக்காக போராடிய தமிழர்கள், தங்களை மதிக்கவில்லை என்றால், அவர்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பதற்கு சிதம்பரமே உதாரணம்.