பாஜக பெரும் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் திடீர் மரணம்! அதிர வைக்கும் காரணம்!

பாஜக பெரும் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் திடீர் மரணத்திற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.


66 வயதான சுஷ்மா ஸ்வராஜ் பாஜகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் டெல்லி முதலமைச்சராகவும் இருந்துள்ளார். வாஜ்பாய் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்துள்ளார். மேலும் பாஜக தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து மக்களவை எதிர்கட்சி தலைவர் எனும் பொறுப்பிலும் இவர் இருந்துள்ளார்.

மோடி தலைமையிலான முதல் அரசில் ஐந்து ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் சுஷ்மா இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறித்த மத்திய அரசின் நடவடிக்கையை கூட பாராட்டி சுஷ்மா ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென சுஷ்மா ஸ்வராஜ் இறந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த போது திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதாகவும் உடனே மயங்கி சரிந்ததாகவும் கூறுகிறார்கள்.

இதனை அடுத்து உடனடியாக சுஷ்மா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஷ்மா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் கடும் மாரடைப்பு காரணமாக சுஷ்மா உயிரிழந்தாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு சுஷ்மாவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அப்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்தே 2019 தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து சுஷ்மா ஒதுங்கினார்.

தற்போது அவர் திடீரென மறைந்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினரையும் அதிர வைத்துள்ளது.