பா.ஜ.க.வுக்கு ஜால்ரா போட்டது ஏன்? ஆ. ராசாவின் அடடே விளக்கம்! போட்டுத்தாக்கும் நாம் தமிழர்!

இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று நம்பிய தி.மு.க. இப்போது தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்திருத்தத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு நிலை எடுத்துள்ளது.


அதாவது எதிர்த்து பேசிவிட்டு, ஓட்டெடுப்பு நடக்கும்போது காணாமல் போய்விட்டார்கள். அதாவது, இது புத்திசாலித்தனமான நடவடிக்கையாம். இதற்கு நாடாளுமன்ற கொறடா ஆ.ராசா மிக நீண்ட ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதன்படி, இப்போது அமலில் இருக்கும் இச்சட்டத்தில்தான், நான்கு புதிய திருத்தங்கள் இப்போது இந்த அரசால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 

1. இச்சட்டத்தின் பிரிவுகள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து இந்தியாவின் நலனுக்கும் இந்தியர்களுக்கும் எதிராக குற்றச் செயலில் ஈடுபடும் எவருக்கும் பொருந்தும்.

2. இச்சட்டத்தின் கீழ் இயங்கும் காவல் அலுவலர்களுக்கு, இந்தியாவிற்கு வெளியிலும் சென்று குற்றம் சம்மந்தமாக விசாரிக்கும் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், சிறப்புரிமைகள் ஆகியவற்றை தருவது.

3. இச்சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றமொன்றை வெளிநாட்டில் நிகழ்த்தினாலும், அதை இந்தியாவில் நடைபெற்ற குற்றமாகவே கருதி வழக்கு பதிவு செய்வது.

4. இக்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவது.

எனவே, ஏதோ இந்த சட்டம் புதிதாக இப்போதுதான் கொண்டு வரப்படுவது போலவும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது போலவும், சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமைகளை மறுக்கும் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது போலவும், கொடூரமான வரம்பற்ற அதிகாரங்கள் காவல் அதிகாரிகளுக்கு புதிதாக அளிக்கப்பட்டுள்ளது போலவும், இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேண்டுமென்றே திரித்து செய்திகளை பரப்பி, தி.மு.க சிறுபான்மை மக்களுக்கு எதிரி என சித்தரிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் ராசா.

எல்லாம் சரிதான் ராசா... இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? இந்த சட்டத்தின் தீமை பற்றி தெரிந்தும் எதிர்த்துப் போட்டிருந்தால் என்ன தவறு. எதிர்த்து ஓட்டுப் போட பயந்து, பா.ஜ.க.வுக்கு ஆதரவு நிலை எடுத்தபிறகு முக்காடு எதற்கு என்பதுதான் கேள்வி.

பாஜகவை உள்நுழையவிடாது தடுக்க எங்களுக்கு வாக்களியுங்கள் எனக் கூறி, வாக்குப்பிச்சை எடுத்து பாராளுமன்றத்திற்குச் சென்ற திமுக, இன்றைக்குப் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து. நாடு முழுமைக்கும் உள்ள இசுலாமிய மக்களுக்கும், எட்டுகோடித் தமிழர்களுக்கும் வரலாற்றுத் துரோகம் செய்திருக்கிறது தி.மு.க. என்று நாம் தமிழர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?