பன்னீருக்கு திடீர்ன்னு ஏன் ஜெயலலிதா சமாதி ஞாபகம்! அலறிய எடப்பாடி! அடுத்த தர்மயுத்தமா?

துணை முதல்வர் பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் ஜெயலலிதா சமாதி நோக்கிப் போகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லப்பட்டதும், அவர் அலறவே செய்துவிட்டார்.


ஏனென்றால், தேர்தலில் முழுக்க முழுக்க ஓ.பி.எஸ்ஸை ஓரங்கட்டி வைத்திருந்தார் எடப்பாடி. அவரது மகனுக்கு மட்டும் சீட் வாங்கிக்கொள்ளுங்கள், மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தார். அதை ஏற்றுக்கொண்டு பன்னீரும் பிரச்னை செய்யாமல் போய்விட்டார்.

பன்னீருக்கு பிரசாரம் போகும் இடங்களில் கூட்டம் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக எடப்பாடியின் ஆட்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக கூட்டம் சேரும் இடங்களில் முன்கூட்டியே போலீஸ் கெடுபிடி காட்டுவது, நடந்து வருபவர்களை, கூட்டத்தின் அருகே சேர்க்காமல் விரட்டுவது போன்று செய்துவந்தனர். 

இது எல்லாமே பன்னீருக்குத் தெரியும் என்றாலும் அமைதியாக இருந்தார். ஏனென்றால், அவரது ஒரே குறிக்கோள், மகனை ஜெயிக்க வைத்து அமைச்சராக்குவதுதான். ஆனால், அந்த ஆசையிலும் மண் அள்ளிப் போட்டார் எடப்பாடி. வேண்டுமென்றே வைத்தியலிங்கத்தை களத்தில் இறக்கி சிக்கலை உண்டாக்கியதால் முதன்முதலாக கடுப்பானார் பன்னீர்.

இந்த நிலையில்தான் திடீரென ஜெயலலிதா சமாதிக்குப் பன்னீர் போகிறார் என்றதும் டென்ஷனாகி கவனிக்கச் சொல்லியிருக்கிறார். அங்கே போய் உட்கார்ந்து எதையாவது ஏடாகூடமாகப் பேசிவிடக் கூடாது என்று கவலைப்பட்டார் எடப்பாடி. நல்லவேளையாக, பன்னீர் அப்படி எதுவும் செய்யவில்லை. அமைதியாக  மகனுக்கு ஜெயலலிதாவிடம் ஆசி வாங்கிவிட்டு திரும்பிவிட்டார். இது வேண்டுமென்றே எடப்பாடிக்கு கொடுக்கப்பட்ட டென்ஷன் என்கிறார்கள். ஏனென்றால், தேர்தல் கூட்டணி வைத்த நேரத்தில் அல்லது வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை எல்லாம் ஜெயலலிதா சமாதிக்குக் கொண்டுசெல்லவில்லை. இப்போது மட்டும் சென்றார் என்றால், சும்மா ஒரு விளையாட்டுக்குத்தானாம்.

பன்னீருக்கு குசும்புதான்.