கெண்டைக் கால் தசையில் திடீரென பிடிப்பு ஏற்படுவது ஏன்?

சிலருக்கு கெண்டைக் கால் தசைப் பகுதியில் திடீரென பிடிப்பு ஏற்படுவது உண்டு. இதனால் ஏற்படும் வலியானது சில நிமிடங்களே நீடிக்கும் என்றாலும் தாங்கமுடியாத வலியாக இருப்பதுண்டு. கால்களை நீட்டி மடக்குவது போன்ற பயிற்சி குறைவாக இருப்பவர்களுக்கும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கும் இந்தப் பிடிப்பு அடிக்கடி வருகிறது.


கர்ப்பமாக இருக்கும் பெண்களில் பெரும்பாலோர் இந்தப் பிடிப்பினால் அவதிப்படுகிறார்கள்.வயதானவர்களில் மூன்றில் ஒரு நபர் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

கடுமையான வெயிலில் வேலை செய்பவர்கள், மது குடிப்பவர்கள் மற்றும் டயாலிசஸ் செய்பவர்களும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள்.பகல் நேரத்தைவிட இரவில் இந்தப் பிடிப்பு வரும்போது வலி அதிகமாக இருக்கிறது.

இந்தப் பிடிப்புக்கு என தனியாக மருந்துகள் எதுவும் கிடையாது. நரம்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் இளநீர் அருந்துவது, உப்பு கரைத்துக்கொடுப்பது போன்றவை பயன் அளிக்கின்றன. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் போன்றவையும் இந்தப் பிடிப்பைக் குறைக்கலாம்.