கலைஞருக்கும் தெரியாத ரகசியம்! நெருங்கிய நண்பருடன் 2007ல் தாய்லாந்து சென்ற ஸ்டாலின்! உண்மையை உடைத்த கராத்தே!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயண விவகாரத்தை ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார்.


அவருக்கு அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் பதில் கொடுத்துவருகிறார் என்றாலும், கராத்தே தியாகராஜன் கொடுத்திருக்கும் பதில் வித்தியாசமாக இருக்கிறது.

ஆம், கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி ஸ்டாலின் தன்னுடைய நண்பருடன் தாய்லாந்து பாங்காகிற்கு நண்பருடன் திடீர் பயணம் மேற்கொண்டதை கேள்வி எழுப்பியிருக்கிறார். ஏனென்றால், அப்போது ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைவிட, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஸ்டாலின் பயணம் மேற்கொள்ளும் விஷயமே தெரியாதாம். அவர் ஏர்போர்ட்டுக்குப் போன பிறகுதான், போலீஸ் மூலம் தகவல் அறிந்துகொண்டார் கருணாநிதி.

மத்திய அரசிடம் அனுமதி பெறாமல், தமிழக முதல்வரிடம் அனுமதி பெறாமல், இன்னும் சொல்லப்போனால் பெற்ற தந்தையிடம் அனுமதி பெறாமல் எதற்காக தாய்லாந்து போனீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கராத்தே தியாகராஜன்.

இதற்கு ஸ்டாலின் பதில் சொல்கிறாரோ இல்லையோ, அமைச்சர் ஜெயக்குமார் சந்தோஷமாக பதில் கூறியிருக்கிறார். ஆம், கராத்தே தியாகராஜனை கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தியாகராஜா..?