மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க. இன்றே இரண்டு பெயர்களை அறிவித்துவிட்டது. வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச.வை சேர்ந்த சண்முகம் ஆகிய இருவர்தான் அவர்கள்.
வில்சன், சண்முகம் திமுக வேட்பாளர் ஆனது எப்படி? மனுஷ்யபுத்திரனை கதற விட்ட ஸ்டாலின்!

இத்தனை சீக்கிரம் தி.மு.க. அறிவிக்கப்பட்டதற்கு காரணம் இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க.வினர்.கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து டெல்லி மேலிடம் தூக்கியது. அது முழுக்க முழுக்க ஸ்டாலினை தாஜா பண்ணுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்கிறார்கள். இந்த வகையில் கராத்தே தியாகராஜனை ப.சிதம்பரமும் கைவிட்டார்.
ஆனால், இதுகுறித்து இன்று டெல்லி மேலிடத்தில் இருந்து ஸ்டாலினிடம் பேசுவதாக இருந்தார்களாம். தி.மு.க.வுடன் என்றென்றும் உறவுடன் இருக்க ஆசைப்படுகிறோம் என்று சொல்லிவிட்டு, ராஜ்யசபா சீட்டில் ஒன்று கொடுத்து உதவ முடியுமா என்று கேட்க இருந்தார்களாம். இந்த தகவல் வெளிவந்ததும், அப்படியொரு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றுதான் முன்கூட்டியே ஸ்டாலின் அறிவிப்பு செய்துவிட்டாராம். இந்த விவகாரத்தால் காங்கிரஸைவிட அதிகம் நொந்துபோனது மனுஷ்யபுத்ரன்தானாம்.
ஏனென்றால், இஸ்லாமியர் ஒருவருக்கு சீட் கொடுக்கவேண்டும் என்று தி.மு.க.வில் ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருந்தது. ரகுமான்கானுக்குக் கொடுக்கலாம் என்று இருந்துவந்த நிலையில், உதயநிதி மூலம் மனுஷ்யபுத்ரன் முயற்சி செய்தார். ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் முன்கூட்டியே முடிவு செய்திருந்த இருவரையும் அறிவித்துவிட்டார் ஸ்டாலின்.
அதேநேரம், ஏனைய மாநிலங்களில் பெரும் செல்வந்தர்களையும், தொழிலதிபர்களையும்தான் இன்றும் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மாநிலங்களவை இடம் கொடுப்பதை நீண்ட நெடிய வழக்கமாகக் கொண்டுள்ளன. இது நல்ல விஷயம்தான்.