ஜனாதிபதியைப் பார்க்க ஸ்டாலின் ஏன் போகவில்லை..? வைகோ வேதனை, கனிமொழி கப்சிப்

20ம் தேதி, அதாவது வியாழன் அன்று ஸ்டாலினை சந்திப்பதற்கு இந்திய ஜனாதிபதி நேரம் ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.


அதாவது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெற்ற 2 கோடிக்கும் மேலான கையெழுத்துக்களை ஒப்படைக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், திடீரென என்ன நடந்ததோ, இன்று அதாவது 19ம் தேதியா டி.ஆர்.பாலு தலைமையிலான டீம் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கையெழுத்துப் படிவத்தை ஒப்படைத்தார்கள்.

அதன்பிறகு வெளியே வந்த டி.ஆர்.பாலுவிடம், ஜனாதிபதி என்னதான் சொன்னார் என்று அனைத்து பத்திரிகையாளர்களும் கேட்டனர். அதற்கு பாலு, ‘அவர் என்னதான் சொல்ல முடியும். பார்க்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் இந்த சட்டம் பாஸாவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்’’ என்று சொல்லி முடித்தார்.

இந்த நேரத்தில், ‘ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்து நிருபர்கள் டி.ஆர்.பாலுவிடம் கேட்க, கொதித்தே விட்டார் வைகோ. எத்தனை முக்கியமான ஆவணங்களை குடியரசுத் தலைவரிடம் கொடுத்திருக்கிறோம், இப்போது இப்படி கேள்வி எழுப்புகிறீர்களே என்று சொல்லி வெளியேறிவ்ட்டார்.

பாவம் கனிமொழி, அமைதியாக வந்து அமைதியாகப் போய்விட்டார்.