காங்கிரஸ் ஆட்களை ஏன் தி.மு.க.வில் சேர்க்கிறார் ஸ்டாலின்..? காங்கிரஸை காலி செய்கிறாரா?

பொதுவாக கூட்டணிக் கட்சியில் இருந்து யாரேனும் கட்சியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டினால், அவர்களை கட்சிக்குள் சேர்க்காமல் மறுப்பதுதான் கூட்டணி தர்மம். அதுதான் இன்றுவரை அனைத்துக் கட்சிகளாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஆனால், இப்போது வெளிப்படையாக காங்கிரஸ் சின்னத்தில் நின்று உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். இது திட்டமிட்டு காங்கிரஸை ஒழிக்கும் செயல் என்று கதர்கள் கொந்தளிக்கிறார்கள்.சமீபத்தில் கை சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற்ற புதுநிலைவயல் ஒன்றிய கவுன்ஸிலர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.

அவருக்காக பாடுபட்ட தொண்டர்களும், சீட் கொடுத்த கட்சித் தலைவர்களும் அதிர்ந்து நிற்கிறார்கள். காங்கிரஸ்காரியாக இருந்தாலும் தி.மு.க. வாழ்க என்றுதான் தினம் தினம் கூவ வேண்டியிருக்கிறது. அதற்குப் பதில் தி.மு.க.காரியாகவே இருந்துவிடலாமே என்ற தொலை நோக்குப்பார்வையில் கட்சி மாறிவிட்டார் என்று மக்கள் கிண்டல் செய்கிறார்கள்.

இது ஏதோ, ஒரு இடத்தில் மட்டும் நடந்தது அல்ல. தமிழகம் முழுவதும் அப்படித்தான் நடக்கிறது. இதைப் பார்க்கும்போது கூட்டணியில் வைத்துக்கொண்டே காங்கிரஸை காலி செய்யும் முயற்சியில் ஸ்டாலின் இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. கதர்களே உஷாராக இருங்கள்.