தண்ணியைக் குடிங்க ஸ்டாலின்! இப்படி கோபப்படா உடம்பு என்னத்துக்கு ஆகும்?

செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கோபமாகப் பேசியதுதான் இன்றைக்கு ஹாட் செய்தி. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கொங்கு கட்சிக்கும் சேர்த்து தி.மு.க. கொடுத்த 40 கோடி ரூபாய் இப்போது அரசியலைக் கலக்கி வருகிறது.


இந்த விஷயத்தில் தி.மு.க. விளக்கம் அளிக்கவேண்டும் என்று பிரேமலதா சொன்ன விவகாரம் ஏற்கெனவே படு சூட்டை கிளப்பியிருந்தது. பிரேமலதா என்ன வருமான வரித்துறை அதிகாரியா என்று கம்யூனிஸ்ட்கள் டென்ஷன் ஆகியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று கொளத்தூர் தொகுதிக்கு வந்த ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது இந்த 40 கோடி ரூபாய் விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. உடனே ஸ்டாலின் சுள்ளென்று கோபப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் கமிஷனுக்குத் தகவல் கொடுத்துவிட்டோம். பிரேமலதாவுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கோபத்துடன் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

தி.மு.க. கொடுத்த 40 கோடி குறித்து விளக்கம் கேட்டால் ஸ்டாலின் ஏன் கோபப்படுகிறார் என்பதுதான் புரியவில்லை. தண்ணியைக் குடிங்க ஸ்டாலின், உடம்புக்கு சிக்கலாகிடப் போகுது. ஏதோ கம்யூனிஸ்ட் கட்சிக்கு டீ காசுன்னு கொடுத்திருப்பாங்க, விட்டுத் தள்ளுங்கப்பா.