ஜெயலலிதா நினைவிடத்தில் புன்னகை எதற்காக? எடப்பாடி, பன்னீர்செல்வத்தை வெளுத்துவாங்கும் தொண்டர்கள்!

ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவுநாள் இன்று அ.தி.மு.க. சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.


 அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் செய்த கலாட்டாதான் அ.தி.மு.க. தொண்டர்களை அதிர வைத்துள்ளது. ஆம், நேரில் சென்றவர்கள் மட்டுமே கண்டு ரசித்திருக்கமுடியும் அந்த சேட்டைகளை. கருப்புச் சட்டை போட்டிருந்த அமைச்சர் பெருமக்கள், ஒருவரையொருவர் பார்த்ததும் ஆனந்தமாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் கமென்ட் அடித்துக்கொண்டும் இருந்தனர்.

அதற்கு முதல்வரும் துணை முதல்வரும் விதிவிலக்கு அல்ல. அவர்களும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக சிரித்து வைத்தனர்.

அதன்பிறகு ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றபோதும், உறுதிமொழி எடுத்த நேரத்திலும் மட்டும்தான், கொஞ்சநேரம் அமைதியாகவும் வருத்தமாகவும் நின்றனர். மற்ற நேரங்களில் எல்லாம் செம ஜாலிதான் அமைச்சர்களுக்கு.

ஏனென்றால், ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால், அமைச்சர் பெருமக்கள் இத்தனை ஜாலியாக வாழ்க்கையை நடத்தமுடியுமா? கேட்பதற்கு ஆள் இல்லாமல் சுற்ற முடியுமா? நல்ல வேளையா போய் சேர்ந்தாங்க என்பதைத்தான் பெரும்பாலான அமைச்சர்கள் முகத்தில் பார்க்க முடிந்தது.

இதைக் கண்டு அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் குமுறியதுதான் பரிதாபம். ஆனால், ‘‘பார்த்தீங்களா, கூட்டத்தைக் காட்டியாச்சு, இனிமே நாமதான்’’ என்று அமைச்சர் பெருமக்கள் பெருமிதம் காட்டியதுதான் மிச்சம்.