பிக்பாஸ் கமல்ஹாசனை சீமான் ஏன் வறுத்தெடுக்கிறார்? இந்தக் காரணம்தானா?

பிக்பாஸ்- நிகழ்ச்சியை பல்வேறு நபர்கள் கண்டித்துவந்தாலும், சீமான் கழுவிக்கழுவி ஊற்றி வருகிறார். அதற்கான காரணத்தை ம.நீ.ம. தொல்காப்பியன் தன்னுடைய பதிவில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்தப் பதவி.


கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டிப்பவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் சீமான் குறிப்பிடத் தகுந்த அரசியல்வாதி.

ஏன் சீமான் பிக்பாஸுக்கு எதிராக இத்தனை வலுவாக முழங்குகிறார் என்று பார்க்க வேண்டி இருக்கிறது. அவருக்கு பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சியை விட அதை முன் நின்று நடத்தும் கமல்காசன் மீதுதான் அதிக கவனம்.

ஏன் அப்படி? பிக்பாஸ் நிகழ்ச்சி கமலை மக்களிடம் மிக நெருக்கத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. இவருடைய பேச்சு மக்களை அவர் பக்கம் சேர்த்து இழுக்கிறது. கமல் பயன்படுத்தும் வார்த்தைகள், அவரது அழுத்தம் திருத்தமானத தொனி, அவரது விளக்கங்கள் - புதுப் புது கருத்துக்கள் இவைகள் எல்லாம் மக்களுடைய பேசு பொருளாகின்றன.

கமல் மக்களுக்குள் ஊடுருவிச் செல்கிறார்; அவர் அத்தனை மக்கள் சபைகளுக்கு உள்ளும் முங்கிப் பரவுகிறார்; அவர்களது மனங்களுக்குள் ஒரு சகஜ பொருள் ஆகிறார்; மக்கள் கமலோடும் கமல் மக்களோடும் உரைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்; மக்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தலைவனை மனதில் இருத்தி அவரிடம் தங்களது பிரச்சினைகளை சொல்ல தலைப் பட்டு இருக்கிறார்கள்.

இதை நுட்பமாக உணர்ந்து இருப்பதால்தான் சீமான் கமல் மீது அச்சப்படுகிறார். மக்கள் அலைஅலையாக கமலோடு இணைந்து கொண்டு இருப்பதைக் கண்டு சீமானுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அதனால்தான் சீமான் பிக்பாஸ்- மீதும் கமல் மீதும் வெறுப்பு அடைகிறார். இவருடைய பேச்சு புரிவது இல்லை என்று கேலி பேசியவர்கள் எல்லாம் இப்போது கதறுகதறு என்று கூறுகிறார்கள்! சீமானின் வெறுப்பால் அல்லது சீமான் போன்றவர்களின் ஆத்திரத்தால் என்ன நடந்து விடப் போகிறது! கமல் மக்களோடு கைகோர்க்கிறார் என்று படுபயங்கரமாக ஒரு ஜால்ரா பதிவு போட்டிருக்கிறார்.