உலக கோப்பை டீமில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தது எப்படி? கோலி கூறிய அதிரடி காரணம்!

2019 - ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அறிவிக்கபட்ட நிலையில், இந்திய அணியில் இடம் பெற கூடிய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் வெளியீடப்பட்டன.


இந்த பட்டியலில் பல முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.  இருப்பினும் பலதரப்பினரிடமிருந்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதவாது "ரிஷாப் பந்த் ஏன் அணியில் இடம் பெறவில்லை?  மேலும் தினேஷ் கார்த்திக் - ஐ எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள் ?" .

இந்த கேள்விக்கு இத்தனை நாட்கள் விராட் கோலி அமைதி காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

"21 வயதே ஆன இளம் வீரர் ரிஷாப் பந்த் , விக்கெட் கீப்பிங் செய்வதில் வல்லவர், மேலும் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி நமது அணிக்கு பெருமையும் சேர்த்தவர் என்றே கூறலாம். ஆனால் துரதிஷ்ட வசமாக அவரை அணியில் சேர்க்கவில்லை, காரணம் இவரை தினேஷ் கார்த்திக்கோடு ஒப்பிடுகையில், குறைந்த அளவு அனுபவம் பெற்றவர் என்பது தான்".

அதுமட்டுமில்லாமல் தினேஷ் கார்த்திக் பல நெருக்கடியான சூழ்நிலைகளையும் அவரது அனுபவம் மூலம் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர். இதன் அடிப்படையில் தான் 33- வயது ஆன  தினேஷ் கார்த்திக்- ஐ அணியில் சேர்த்தோம் என்று கூறினார்.

அணியின் உறுப்பினர்களை தேர்ந்து எடுக்கும் மிக பெரிய பொறுப்பு, M.S.K .பிரசாத் இடம் உள்ளது.  அவர் பேசும் போது , " கோலி தலைமையிலான இந்திய அணியில் தோணி தான் முதன்மை விக்கெட் கீப்பர் ஆவார்.  அவரால் ஆட்டத்தில் இடம் பெற முடியாத சூழலில்  மட்டும்  தான்  தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என்று தெளிவாக கூறினார்.

மேலும் வரும் மே 23 -ம் தேதி வரை, அணியின் உறுப்பினர்களை மாற்றி அமைக்கலாம். கார்த்திக் கடந்த 2004 - ம் ஆண்டு, முதன் முறையாக ஒரு நாள் போட்டியில் விளையாடினார். எந்த வரிசையில் இறங்கினாலும் பேட்டிங் செய்வதில் வல்லவர்.

அணியின் உறுப்பினர் தேர்வு குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர்  ரவி சாஸ்திரி கூறுகையில், உலக கோப்பைக்கான இந்திய அணியில் சில திறமையான வீரர்களை இழந்து விட்டோம் என்றார். மேலும் அதிகபட்சமான நன்றாக ஆடக்கூடிய வீரர்கள் மத்தியில் வெறும் 15 பேரை மட்டும் தேர்வு செய்வது மிகவும் கஷ்டமான செயல் தான் என்று கூறினார்.