சமூக வலைதளங்களில் இப்போது வைரலாக பேசப்படுவது பியூஸ் மானஸ்க்குப் போடப்பட்ட செருப்பு மாலையும், முகத்தில் கொடுக்கப்பட்ட கும்மாங்குத்துவும்தான்.
பியூஸ் மானஸ் எனும் அதி மேதாவி எதுக்காக பா.ஜ.க. அலுவலகத்திற்குப் போனாராம்? அங்கே பொங்கல் கிடைக்கும் என்று நினைத்தாரா?

பியூஸ் ஒரு சமூகப் போராளி என்று சொல்லப்படுகிறது. சரி, அவர் சமூகப் போராளியாகவே இருக்கட்டும். அவர் சேலம் பா.ஜ.க. அலுவலகத்தில் போய் என்ன கேட்கப் போகிறார். அங்கே பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ சட்டமன்ற உறுப்பினர் அல்லது கட்சியின் அரசியல் பிரிவு தலைவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா..?
சேலம் அலுவலகத்தில் இருப்பவர்கள் எப்படி தேசிய அளவில் மோடி எடுக்கும் முடிவுகள் குறித்து தெளிவாக பதில் கொடுக்க முடியும். பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள் என்று ஒரு பட்டியலை சமீபத்தில் தமிழிசை வெளியிட்டார். அவர்களையாவது சந்திக்க முயற்சி செய்திருக்கலாம்.
இந்த செயல் முழுக்க முழுக்க விளம்பரத்துக்காகவே செய்யப்பட்டது என்று சின்னக் குழந்தைகூட சொல்லும். இது தேவைதானா பியூஸ் மானஸ்..? இவ்வளவு கேவலமாக விளம்பரம் தேடுவதற்குப் பதில் நீங்கள் வேறு ஏதாவது செய்யலாமே..?