தஞ்சை கோயில் கும்பாபிஷேகத்துக்கு எடப்பாடியும் பன்னீரும் ஏன் போகவில்லை தெரியுமா?

இதுவரை தஞ்சை கோயில் விழாவுக்குப் போன அரசியல்வாதிகள் யாரும் பதவியில் தொடர்ந்து நீடித்தது இல்லை என்ற தகவல் காரணமாகவே, அரசியல் தலைவர்கள் யாரும் எட்டிப்பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது.


அதனால்தான் தஞ்சையில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று எழுப்பப்பட்ட விவகாரத்தையும் அரசியல்வாதிகள் பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை. இதற்கு முன்பு இந்திரா காந்தி, கருணாநிதி ஆகியோர் இங்கே வந்த பிறகுதான் பதவி இழந்தார்களாம். 

வேறு வழியே இல்லாமல் லோக்கல் மினிஸ்டர் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார். அதுவும் மேலிடத்தில் கடும் நெருக்கடி கொடுத்ததால் மட்டுமே இங்குவந்தாராம்.

எல்லோருக்கும் நல்லது செய்யும் கடவுள், தப்பு செய்தவர்களை கடுமையாக தண்டிப்பார் என்பது ஐதீகம். அதனால் குற்றமுள்ள நெஞ்சைக் கொண்ட அரசியல்வாதிகள், தஞ்சை பெரியகோயில் கும்பாபிஷேகத்தை காணாமல் போய்விட்டார்கள்.

எப்படியாயினும் போகப்போகிற பதவிதானே... சிவன் எடுத்ததாக இருக்கக்கூடாதா..?