கோட்சே காந்தியை கொன்றது ஏன் தெரியுமா? இதோ அவனது வாக்குமூலம்?

Zoom In Zoom Out Print

சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் சொல்லியிருக்கும் நாதுராம் கோட்சேவின் வாக்குமூலம் இப்போது இணையத்தில் பரபரப்பாக உலாவருகிறது. அந்த வாக்குமூலத்தை படித்துப் பாருங்கள். ஏதோ, கமல்ஹாசனால் முடிந்த உதவி இது.

டெல்லி செங்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். இது ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். #வாக்குமூலத்தில் கோட்சே கூறி இருந்ததாவது:-.

காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை கிடைக்கும் என்று அவரின் கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசைப்பட்டு அவருடன் சேர்ந்தேன்..

"தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என்
மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக்கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன்.

சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன். 1946_ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரம் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நவகாளியில் நடந்த
நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தை கொதிக்கச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்தவர்களை மகாத்மா காந்தி ஆதரித்தார்.

அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்து கோவிலில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் "குர்ஆன்" வாசகங்களைப் படிக்கச் செய்தார். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத்கீதையை மகாத்மா காந்தியால் படிக்க முடியுமா? 1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15_ந்தேதி நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகள்.

தீக்கு இரையாக்கப்பட்டன. இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது. மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள்
சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்கு பாகிஸ்தானிலும் கொடுமைகள் நடந்தன. 11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் மகாத்மா காந்தி, "முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது.

பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை ஆண்டு வந்த போது, மகாத்மா காந்தி எதிர்த்துப் போராடி பெரும் வெற்றி தேடி தந்தவர் என்பதை நான்
மறுக்கவில்லை; அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்கு காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்கு துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கம், அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.

நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்க வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நாட்டை எங்கேயோ கொண்டுபோய் சேர்த்து விடும். அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர். ஒரு நீதிபதி என்றும் கூறலாம். அவரது சத்யாக்கிரக அரசியல், பகுத்தறிவு இல்லாதது..

ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக்கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகி விட்டன.
ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலை போன்ற பெரிய தவறுகளைச் செய்தபடி இருந்தார்
.
நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அதனை ஏற்க மறுத்த்து, காந்தியை கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். ஆனால் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு, அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலை அடையும் என்பது உறுதி.

மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவின்றி அண்ணல் காந்தியடிகளை கொன்றதாக கூறலாம். இந்தியா ஒரு பலமுள்ள, சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். நம் நாடு வல்லரசாக திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம்  கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல முடிவு எடுத்தேன். ஆனால் நான் அது பற்றி யாரிடமும் பேசவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை வரவழைத்து கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம்  செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். ஆனால் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்தி தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், நான் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை ஆகும் செய்தியை கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாண ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்து பெண்கள் சந்தைகளில் ஆடு_ மாடுகள் போல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள
இந்தியா நோக்கி ஓடிவந்தனர்.  இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.

"தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு அவர் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார். எனவே அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத் தந்தை. பாகிஸ்தான் பிரிவினைக்கு இணங்கியிரா விட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்கு தான். 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி?

பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம்,சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வு, கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தானுடன் சேர்க்கப்பட்டது. பாரதம் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது.
முஸ்லிம்கள் தேச விரோத செயல்களுக்கான வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர்.

பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான்
முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை.
என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்யவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளை கொட்டித் தீர்க்கவே விரும்பினேன்.

மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையும் விதிக்கட்டும். என்மீது கருணை காட்டவேண்டும் என்று நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "கொலைக்கு நானே பொறுப்பு". என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். 
கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது வழக்கு உள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பு.

இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு உள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்த
செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மம், பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கோட்சே கூறினான்.