டெல்லியில் மோடி படை தோற்றது ஏன்... காங்கிரஸ்ன்னு ஒரு கட்சி இன்னமும் இருக்குதா..?

டெல்லி தேர்தல் விவகாரத்தில் ஆம் ஆத்மி வெற்றியைவிட, மோடியின் தோல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ஆம், பணபலம், ஆள்பலம், மோடி-ஷாவின் பிரசாரம். கேஜ்ரிவாலைக் கேவலப்படுத்திய பேச்சுகள் -இவை எவையும் எடுபடவில்லை. இதைவிட கொடூரம் நடைபெற்றது. ஆம், ஆம் ஆத்மியில் இருந்த இரண்டாம் கட்ட தலைவர்களை எல்லாம் கட்சியில் இருந்து இழுத்து, பா.ஜ.க.வில் சேர்த்துக்கொண்டனர். அவர்கள் அத்தனை பேரும் தோற்றுப்போனது மிகப்பெரிய ஜனநாயக வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

மோடி தன் அரசையே பணயம்வைத்து இத்தேர்தலைச் சந்தித்தார். முக்கியமாக. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்குமாறும், அவ்வாறு வாக்களிக்காவிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் டெல்லிவாசிகளை மிரட்டினார். 

மோடியின் பாதையில் அமித் ஷாவும் களத்தில் இறங்கி விரைவில் ராமர் கோயில் கட்டப் போகிறோம். பாகிஸ்தானியர்களுக்கு மரியாதை தர முடியாது என்று இந்துத்துவாக மாறி பேசிப் பார்த்தார். ஆனால், மோடியின் அத்தனை திட்டங்களையும் அரவிந்த் கெஜ்ரிவாலின் மவுனப் போராட்டம் வெற்றி அடைந்துவிட்டது. 

சரி, காங்கிரஸுக்கு என்னாச்சு? கடந்த தேர்தலில் கிடைத்த பூஜ்ஜியத்தில் இருந்து மூன்று சீட்டாவது கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், வழக்கம்போல் மீண்டும் பூஜ்ஜியம்தான். அதேநேரம் சில காங்கிரஸ் தலைவர்கள், ‘காங்கிரஸ்க்கு ஓட்டுப் போட்டால் அது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாறிவிடலாம் என்பதால் மக்கள் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போட்டுள்ளனர் என்று சொல்கிறார்கள்.

எப்படியோ தேசியக் கட்சிகளுக்கு மரண அடி விழுந்துள்ளது, இது மற்ற மாநிலங்களிலும் தொடரத்தான் போகிறதோ..?