கமல்ஹாசன் கொந்தளிப்பு ஏன் தெரியுமா..? ரஜினியும் கைவிட்டாராம்.

சமீபத்தில் போலீஸ் விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னாமாகி, கடைசியில் நீதிமன்றத்தில் போய் நிவாரணம் தேடினார் கமல்ஹாசன்.


அவருக்கு ரஜினிகாந்த் தொடங்கி யாருமே ஆதரவு தரவில்லையாம். அவரை விரட்டியதில் அ.தி.முக.வை போலவே பா.ஜ.க.வுக்கும் பங்கு உண்டு என நினைக்கிறார்.

அதனால்தான், கொரோனா குறித்து மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையை அனைவரும் பாராட்டிவந்தாலும், கமல்ஹாசன் மட்டும் தனி ரூட்டில் மோடியை விமர்சனம் செய்திருக்கிறார்.

அடிமட்ட மக்களின் வலியும் வேதனையும் தெரியாத அரசு என்று சொன்னதில் தொடங்கி, கொரோனா நேரத்தில் எதிரடி கொடுத்திருப்பதைக் கண்டு அவரது கட்சியினரே அதிர்ந்து பார்க்கிறார்கள்.

சும்மாவே போலீஸ் விரட்டுது, இனியும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ. பார்க்கலாம்.