துட்டு வாங்கிட்டு திட்டும் இளையராஜா என்ன லூசா? கொலைவெறியில் இளம் ரசிகர்கள்!

இன்றைய இளைஞர்களுக்கு இளையராஜா என்றால் யாரென்றே தெரியாது. அவர்களுக்கு அனீருத்தும், ஆதியும்தான் ஆதர்ச இசையமைப்பாளர்கள்.


இந்த நேரத்தில்தான் 96 இசையமைப்பாளரை ஆண்மையில்லாத இசையமைப்பாளர் என்று விமர்சனம் செய்திருந்தார் இளையராஜா. உடனே கடுப்பான 96 டீம், அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட அத்தனை இளையராஜா பாடலுக்கும், அவரிடம் அனுமதி வாங்கியிருக்கிறோம், ராயல்டியும் கொடுத்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதைக் கேட்டதும் இளசுகள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கிறார்கள். இளையராஜாவுக்கு என்னதான் வேண்டும். துட்டு வாங்கிட்டு திட்டுறதுக்கு அவர் என்ன லூசா? என்று டென்ஷன் ஆகிறார்கள். இளையராஜா என்னவெல்லாம் செய்தார் என்று தேடிப்பிடித்து போடுகிறார்கள்.

இளையராஜா, ‘பெரியார்’ படத்திற்கு இசை அமைக்க மறுத்துவிட்டார். திருவாசகத்துக்கு இசையமைக்க பணமில்லை என்று சொல்லிவிட்டு நகைக்கடை ஓனரைப்போல தனது மகளின் திருமண வேண்டுதலுக்காக மூகாம்பிகை கோயில் உண்டியலில் கொத்து கொத்தாக நகைகளை கொட்டினார். கம்யூனிசத்திற்கு எதிராக பேச ஆரம்பித்தார்.  

சமீபத்தில், ரமண ரிஷி உயிரோடு எழுந்தார் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று கிறிஸ்துவ சிறுபான்மைக்கு எதிரான விஷத்தை கக்கி சர்ச்சையில் சிக்கினார். ஆர்.எஸ்.எஸ். பாஜகவிற்கும் இளையராஜாவுக்கும் வேறு என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? இப்போதும், தன்னை ஒரு கடவுளாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்று வலைதளத்தில் தெறிக்க விடுகிறார்கள்.

இளையராஜான்னு சொன்னாலே இனி அவர் காசு கேட்கலாம் என்றும் கடுப்பேற்றுகிறார்கள்.